
தேவையானவை:
முருங்கைக்காய் – 2
கத்தரிக்காய் – 4
தக்காளி – 2
சேனைக்கிழங்கு – 50 g
உருளை -1
கேரட் – 1
வாழைக்காய் – 1
அவரைக்காய் – 6
மாங்காய் – பாதி
பச்சை மிளகாய் – 4
சி.வெங்காயம் – 10
சீரகம் – 1 ஸ்பூன்
தேங்காய் அரை மூடி
தயிர் – 1 ஸ்பூன்
தாளிக்க தேங்காய் எண்ணெய் – 50ml
உப்பு தேவையானது
செய்முறை:
காய்கள் அனைத்தையும் வெட்டி வைக்கவும். பச்சை மிளகாய், சீரகம், சின்ன வெங்காயத்தை மிக்ஸியில போட்டு அரைத்து காயில் போட்டு உப்பு போட்டு வேக வைக்கவும். 10 நிமிடம் வெந்த பின்பு தேங்காயை அரைத்து ஊற்றவும். 5 நிமிடம் கழித்து தயிரை ஊற்றிப் பின்பு தேங்காய் எண்ணெய் ஊற்றித் தாளிக்கவும். மஞ்சள் தூள் போடக்கூடாது.
ரசம் சோறுக்கு ருசியாக இருக்கும். அடை அவியல் நன்கு இருக்கும். எல்லா காய்களும் சேர்வதால் சத்துக்கிடைக்கும்.























































